பிரபு தேவா மீது வெறித்தனமான காதல்; அவருக்காக அதையே நிறுத்திட்டேன் - ரகசியம் உடைத்த வனிதா!
பிரபு தேவாவை காதலித்ததாக நடிகை வனிதா மனம் திறந்துள்ளார்.
நடிகை வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் சிறிய வயது முதலே நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யுடன் சந்திரலேகா எனும் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர்.

இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின் ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த திருமண வாழ்க்கையும் சுமூகமாக அமையவில்லை.
பிரபு தேவா மீது காதல்
தொடர்ந்து, 2020ல் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டார். கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்த பீட்டர் பால் உயிரிழந்தார். இந்நிலையில், வனிதா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்தேன். காதலன் படம் வந்த சமயத்தில் அவரின் புகைப்படங்கள், செய்திகள் எல்லாவற்றையும் சேகரித்து வந்தேன். நக்மாவாக தன்னை நினைத்துக்கொண்டு, கனவில் பிரபுதேவாவுடன் டூயட் ஆடியுள்ளேன். தந்தை விஜயகுமார், பிரபுதேவைவை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
விதவிதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்தேன். நான் வெஜிடேரியன், முட்டை மட்டும் தான் சாப்பிடுவேன் என்று கூறி ஷாக் கொடுத்துவிட்டார். உடனே ஓடி போய் முட்டையை வைத்து சமைத்து கொடுத்தேன்.
அதன் பிறகு சில நாட்கள் பிரபுதேவாவிற்காக நானும் வெஜிடேரியனாக மாறிவிட்டேன். அதன் பிறகு மீண்டும் அசைவம் சாப்பிட தொடங்கிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil