இதைப்பற்றி பேச விரும்பல.. ஸ்ட்ரிட்டாக கூறிய ஜோவிகா - வனிதாவை மிஞ்சிய மகள்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தனது படிப்பு குறித்து ஜோவிகா கூறியது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ்-7
பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. இவர் பிக்பாஸ் சீசன் 7னில் இடம்பெற்றுள்ளார். அதனையொட்டி, ஜோவிகாவுக்கு இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அதில் டிப்ளமோ படித்து முடித்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஜோவிகா
அதனைத் தொடர்ந்து, 12ம் வகுப்பு வரையாவது படி என விசித்ரா உள்ளிட்ட மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் அட்வைஸ் செய்த நிலையில், 'இதை பற்றி மற்றவர்கள் பேச நான் விரும்பவில்லை' என ஜோவிகா ஸ்ட்ரிக்ட் ஆக கூறிவிட்டார்.
இதனால் அவரது அம்மா வனிதா போன்று எதையும் நேராக சொல்பவராக இருக்கிறார். நிச்சயம் வெற்றிபெறுவார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையைத் தொடர்ந்து சினிமாவிலும் ஜோவிகாவை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.