என் வாழ்க்கையை சீரழித்தது அப்பா தான்...பகிரங்கமாக குற்றம்சாட்டிய வனிதா
தன்னுடைய வாழ்க்கையில் தனது தந்தை விஜயகுமார் எடுத்த தவறான முடிவுகளால் தான் தனது வாழ்க்கை சீரழிந்து போனது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
வலிமையாக இருக்கிறேன்
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் கூறுகையில், “மனதளவில் தான் தற்போதும் மிகவும் வலுவாக இருப்பதாக குறிப்பிட்டு, தன் மாற்றத்திற்கு காரணம் தந்தை விஜயகுமார் தான் என குற்றம்சாட்டினார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தந்தை பிள்ளைகள் அனைவரது பெயரையும் கூறி அவர்கள் அனைவரும் அவர் சொல்வதைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிவித்து இடையில் தனது பெயரை மட்டும் விட்டு விட்டார் என சுட்டிக்காட்டினார்.
அந்த வீடியோ பார்த்த போது தனக்கு மிகவும் கோபம் தான் வந்தது என கூறிய வனிதா, தான் கோபத்தில் அழுத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் தனது தந்தையின் பேச்சை கேட்டதால் தான் தன்னுடைய வாழ்க்கை இப்படி ஒரு குழப்பமாகிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அப்பாவே காரணம்
வாழ்க்கையில் தன் தந்தை தனக்கு தவறான அறிவுரை கூறினார் என்று சுட்டிக்காட்டிய வனிதா. அதை தான் உணர்ந்ததிலிருந்து, அவர்கள் சொல்வதற்கு கீழ்ப்படியவில்லை என்ற பேச்சு வந்துவிட்டது என தனது வீட்டாரின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்.
அப்பா சொன்னதை மட்டும் கடைப்பிடித்ததால் தன் வாழ்க்கையே குலைந்தது என்றும் தன்னம்பிக்கைதான் இப்போது தனக்கு பலம் என்று கூறி, விஜயகுமார் தன் அப்பா இல்லை என்று அவர்களால் கூற முடியாது என்றும் தனது தந்தையின் பெயருடன் தனது பெயரும் திரும்ப திரும்ப வந்தால் அது அவர்களுக்கு தான் செய்யும் இனிய பழிவாங்குதல் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.