ஜோவிகா "பண்ணாதெல்லாம்".....கமல் அத விட்டுட்டாரு...!! வனிதா விஜயகுமார் கருத்து!!
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி ஒன்றை நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், தற்போதைய போட்டியாளர் ஜோவிகாவின் தாயான வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வருபவர் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. அவ்வப்போது இந்நிகழ்ச்சி குறித்து யூடியூப்பில் பேசி வரும் வனிதா, இந்த வார நிகழ்ச்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜோவிகா படிப்புமுக்கியமில்லை என கூறியது பெரும் அதிர்வலைகளை சமூகவலைத்தளங்களில் ஏற்படுத்தியது. அதில் பேசும் போது, பிரதீப் நடந்து கொண்ட முறையை கமல்ஹாசன் பாராட்டியிருந்ததை குறிப்பிட்டு, அது ஒரு நல்ல பாயிண்ட் என பாராட்டினார்.
கமல் அத விட்டுட்டாரு
ஆனால் கமல் ஒரு முக்கியமான விஷயத்தை மிஸ் செய்து விட்டார் என்ற வனிதா, அது என்னவென்றால் நிக்சனும் ஜோவிகாவும் டாஸ்க்கில் கண்ணாடி உடைந்த பின்னர், ஒருவருக்கொருவர் முதல் உதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர் என்று கூறி, அப்போது அங்கு யாரோ ஒருவர் டாஸ்க்கில் உள்ள பாட்டில்களை பற்றி கேட்க, ஜோவிகா அப்படி ஒரு கேம் தனக்கு தேவையில்லை என்றும் கேம் போனால் போகட்டும் என்று சாடி இருந்ததை குறிப்பிட்டார்.
அதை கமல் கவனித்து சொல்லி இருக்கலாம் என்ற வனிதா, கமல் எதிர்பார்த்த, அவர் சொன்ன விஷயத்தை பிக்பாஸ் வீட்டினுள் ஜோவிகா நிகழ்த்தி இருக்கிறாள் என்று குறிப்பிட்டு அதை கமல் மிஸ் செய்து விட்டார் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார்.