ரெட் கார்டு மேட்டர்.. நள்ளிரவில் நடிகை வனிதாவை கொடூரமாக தாக்கிய மர்ம நபர் - ஷாக்!
நடிகை வனிதாவை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வனிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிக் பாஸ் 7 வது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதன் பின் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, பிரதீப், அன்ன பாரதி, ஐஷு, கானா பாலா, ஆர்ஜே பிராவோ என ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து ‘ப்ரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்ததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த இணையத்தலமே ப்ரதீப்பைய் பற்றி தான் பேசியது. மேலும், ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முதல் இடத்தை பிரதீப் ஆண்டனி என்ற ஹாஷ்டாக் பிடித்தது.
தாக்குதல்
இந்நிலையில், நடிகை வனிதா தன்னை பிரதீப்பின் ஆதரவாளர்கள் தாகிவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "நேற்றிரவு பிக் பாஸ் 7 தமிழ் ரிவ்யூவை முடித்துவிட்டு, இரவு உணவுக்கு பிறகு என் தங்கை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது காருக்கு அருகில் சென்றேன்.
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
லைட் இல்லாமல் இருட்டாக இருந்த அந்த இடத்தில் திடீரென தோன்றிய மர்ம நபர் ஒருவர் “ரெட் கார்ட்” கொடுக்குறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட் வேற..“என்று கூறியபடி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
Brutally attacked by god knows who ! A so called #PradeepAntony supporter. Finished my #BiggBossTamil7 review and had dinner and walked down to my car i parked in my sister sowmyas house was dark and a man appeared from nowhere and said red card kudukreengala
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
பிரதீப் ஆதரவாளராக அவர் இருக்கலாம்.இரவு 1 மணிக்கு ரத்தம் வடிய வலியில் துடித்த என்னை, என் தங்கை மீட்டு முதலுதவி கொடுத்து, இது குறித்து போலீசிடம் புகாரளிக்குமாறு வலியுறுத்தினார், ஆனால் எனக்கு அதில் நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அந்த நபர் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என்னை தாக்கிவிட்டு பைத்தியக்காரன் போல் சிரித்த அவன் சத்தம், என் காதுகளில் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.