பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் முளைத்த காதல்? - கொளுத்திப்போட்ட வனிதாவால் அதிர்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா மற்றும் அபிராமி இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக சகபோட்டியாளர் வனிதா தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இந்த வாரம் வீட்டின் தலைவராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 80களில் 80களின் வாழ்வின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்யவில்லை என கூறி வனிதா விஜயகுமார் - பாலாஜி முருகதாஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஏற்கனவே நிரூப் - அபிராமி இடையேயான முன்னால் காதல் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இருவருமே தன்னிலை விளக்கம் அளித்து நிகழ்ச்சியில் நல்ல போட்டியாளர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பாலாஜி முருகதாஸ் விளையாட்டாக செய்த விஷயம் வனிதாவை மேலும் கோபமூட்டியது.
தொடர்ந்து நிரூப்பிடம் பேசிய வனிதா அபிராமிக்கும், பாலாஜிக்கும் இடையே காதல் இருப்பது போல பேசுகிறார். அபிராமி யார் எது சொன்னாலும் எளிதாக நம்பி ஏமார்ந்துவிடுவார். பாலாஜி தனக்கு காதலி இருப்பதாக கூறிக்கொண்டு அபியிடம் எப்படி பாலாஜியால் நெருக்கமாக பழக முடிகிறது? இது பற்றி உனக்கு தெரியுமா? அபிராமி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? என கேள்வியெழுப்புகிறார்.
இதற்கு பதிலளித்த நிரூப் அபிராமி என்னோட எக்ஸ், பாலாஜி என் நண்பன், பாலாஜிக்கு அபிராமி என்னுடைய எக்ஸ் என்பது தெரியும். அதனால் பாலாஜி அபிராமியை லவ் பண்ணுவாரா? என தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்களுடன் நிகழ்ச்சி நகர்வதாக கருத்து தெரிவித்துள்ளனர்.