அனுமதி கேக்கலையா..? செத்தவங்க போட்டோ தான் சினிமாவுல கட்டுவாங்க!! வனிதா விஜய்குமார்!!
மகன் போட்டோ குறித்து பேசும் போது, பொதுவாக இறந்தவர்களின் போட்டோ தான் சினிமாவில் காண்பிப்பார்கள் என்றார் வனிதா விஜயகுமார்.
ஆச்சரியம் தான்
வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் புகைப்படம் லியோ படத்தில் இடம்பெற்று பெரும் வைரலாகி இருக்கின்றது. இது குறித்து பலரும் பேசி வரும் நிலையில் தற்போது அது குறித்து நடிகை வனிதா விஜயகுமாரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வனிதா பேசும் போது, எனக்கு அது உண்மையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது என குறிப்பிட்டு, தான் இதற்காக லோகேஷ் கனகராஜூக்கும், விஜய்க்கும் சமூக வலைதளத்தில் நன்றியை கூட தெரிவித்திருந்தேன் என்றார்.
இறந்தவங்க போட்டோ தான்
இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்று தான் நினைக்கிறேன் என கூறிய வனிதா பொதுவாக திரைப்படங்களில் இறந்து போனவர்களை தான் போட்டோக்களாக வைப்பார்கள் - அதற்காக யாரும், யாரிடமும் சென்று அனுமதி கேட்க வேண்டிய தேவை இல்லை , காரணம், அவர்களே இந்த உலகத்தில் தற்போது இல்லை என்றார்.
ஆனால் அதனை படத்தில் பார்க்கும் பொழுது அதில் நமக்கு ஒரு விதமான ரிச் கிடைக்கும் எனக் கூறி லியோ திரைப்படத்தில் விஜய் காண்பித்த போட்டோ ஸ்ரீஹரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோ தான் என்றும் அதை படத்தில் வைத்தது தனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது என்றார்.