வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

Vani Jairam
By Irumporai Feb 05, 2023 06:43 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

வாணி ஜெயராம் மரணம்

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு | Vani Jayaram Was Cremated Today

காவல்துறை மரியாதை

இந்நிலையில், மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த டி.ஜி.பி-க்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதியம் 2 மணியளவில் வாணி ஜெயராம் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது,