பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் இன்று தகனம்
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது.
வாணி ஜெயராம் மரணம்
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78). படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வாணி ஜெயரம் கடந்த 1971 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த "குட்டி"படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்கசுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’பாடம் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 18 மொழிகளில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
இன்று தகனம்
அண்மையில் தான் வாணி ஜெயராமுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது. இந்நிலையில், மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாணி ஜெயராம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில், அவரது உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை IBC Tamil