மல்லிகை என் மன்னன் மயங்கும் : வாணி ஜெயராமின் கடைசி வீடியோ... சோகத்தில் ரசிகர்கள்

Death Vani Jairam
By Irumporai Feb 04, 2023 10:28 AM GMT
Report

பழம் பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

வாணி மரணம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம் (78). வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 வைரலாகும் வீடியோ

இந்த நிலையில்மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடைசியாக தனக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் அந்த வீடியோவில் தீர்க்க சுமங்கலி படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை பாடினார்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் : வாணி ஜெயராமின் கடைசி வீடியோ... சோகத்தில் ரசிகர்கள் | Vani Jayaram Last Video Viral On Social Media

அதன் பின்னர் , 52 வருடங்களாக திரை இசைத்துறையில் 19 மொழிகளில் பாடி மிக நீண்ட பயணம் மேற்கொண்ட எனக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கு என்னுடைய பாடல்களை கேட்டு ரசித்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

இந்த விருதை அளித்து என்னை கௌரவப்படுத்திய மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியையும் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பேசியிருந்தார்.

இதுதான் வாணி ஜெயராம் கடைசியாக பொதுவெளியில் பேசி வெளியிட்ட வீடியோ இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது