வாணி இறப்பு இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு... - பாடகி பி.சுசீலா உருக்கமான பேட்டி...!

Vani Bhojan Death
By Nandhini Feb 05, 2023 10:53 AM GMT
Report

பாடகி வாணி ஜெயராமின் இறப்பு இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்று பாடகி பி.சுசீலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி வாணி ஜெயரம் மரணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அவரது மறைவு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு, 10 காவலர்கள் தமிழக காவல்துறை சார்பில் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாடகி வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட்டது. இவருடைய உடல் தகனம் செய்யும் போது, குடும்பத்தினர், ரசிகர்கள், சினிமாத்துறையினர் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

vani-jairam-indian-singer-death-p-susheela-speech

பாடகி பி.சுசீலா உருக்கமான பேட்டி

மறைந்த பாடகி வாணி ஜெயராமிற்கு, பாடகி பி.சுசீலா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், வாணி ஜெயராமின் மீது நல்ல நட்பும், மரியாதையும் இருந்தது.

வாணி ஜெயராமின் இறப்பு இசைத்துறைக்கு மிகப் பெரிய இழப்பு.. நானும், வாணி ஜெயராமியும் ஒரு 100 பாட்டுக்கு மேல் சேர்ந்து பாடியிருக்கிறோம். வாணி நிறைய பேசமாட்டாங்க. சிரிக்க மாட்டாங்க. அவங்களை சிரிக்க வைப்பதே ரொம்ப கஷ்டம். பாலு, நானும், வாணி இருக்கிறப்போதான் அவங்க சிரிப்பாங்க.

வாணி ஜெயராம் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் என்னால் நம்பமுடியவில்லை. ரொம்ப நல்லவங்க.. நல்ல பாடகி... 7 சுவரங்களை அவரை மாதிரி யாருமே பாட முடியாது. ஒரு தனிப்பட்ட குரல் அவருக்கு. வாணியின் குரல் எங்க கேட்டாலும் சரியாக நான் கண்டுபிடித்துவிடுவேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.