30 குண்டுகள் முழங்க பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் இறுதி மரியாதை...!
மறைந்த முன்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க தமிழக காவல்துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பிரபல பாடகி வாணி ஜெயரம் மரணம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
அவரது மறைவு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
3 முறை தேசிய விருது உள்பட பல மாநிலங்களின் விருதுகளை அவர் பெற்றுள்ளார். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை சார்பில் இறுதி மரியாதை
இன்று மதியம் 2 மணிக்கு வாணி ஜெயராம் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தற்போது, சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழக காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு, 10 காவலர்கள் தமிழக காவல்துறை சார்பில் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan
