வாணிபோஜன் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்ட மகான் படக்குழு - புலம்பும் ரசிகர்கள்

simran vikram karthiksubburaj Mahaan actressvanibhojan Dhruvvikram வாணிபோஜன் மகான் கார்த்திக்சுப்புராஜ்
By Petchi Avudaiappan Feb 10, 2022 04:19 PM GMT
Report

மகான் படத்தில் நடிகை வாணி போஜன் தொடர்பான காட்சிகள் இடம் பெறாததது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் “மகான்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று நள்ளிரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே  கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

மேலும் இப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், முத்துகுமார், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேசமயம் படத்தில் ட்ரெய்லர் வரை இடம் பெற்றிருந்த “சின்னத்திரை நயன்தாரா” வாணி போஜன் தொடர்பான காட்சிகள் படத்தில் ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை. 

இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மகான் படத்தின் வெற்றி மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த வாணி போஜனும் மிகுந்த கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

படத்தின்  டைட்டில் கார்டில் படம் ஆரம்பிக்கும் முன்பு நன்றி என்று வாணிபோஜன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், படம் முடிந்த பிறகு  வரும் காட்சியில் கதாபாத்திரங்களின் பட்டியலில் மங்கை என்ற கதாபாத்திரத்தின் பெயரோடு வாணிபோஜன் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை படத்தின் நீளம் கருதி வாணி போஜன் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்காது என கருதப்படுகிறது.