லிவிங் ரிலேஷன்ஷிப்.. உங்க தேவைக்காக இஷ்டத்துக்கு பேசுவீங்களா? - கடுப்பான வாணி போஜன்!
நடிகை வாணி லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து பதிலளித்துள்ளார்.
வாணி போஜன்
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் நடித்து பிரபலமான வாணி போஜன். இவர் வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் பரத்துடன் இனைந்து லவ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
காட்டம்
இந்நிலையில், அவர் கூறுகையில், "சின்னத்திரையில் இருந்த வரையில் யாரும் பெரிதாக சர்ச்சையாக பேசமாட்டார்கள். ஆனா, படம் நடித்ததும் ஒரு ஹீரோவுடன் நடித்தால் உடனே இவங்களோட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருகாங்க.. அப்புடி, இப்படினு கிளப்பிவிடறாங்க.
இதை நான் யாருக்கு விளக்கமளிப்பது என்று தெரியவில்லை. ஒரு யூடியூப் சேனல் வச்சிருக்கோம்னு என்னவேனாலும் பேசக்கூடாது. அதுவும் நடிகை நடிகர்களை தான் இழுக்குறாங்க. வியூஸ்காக அந்த விஷயம் உண்மையா பொய்யான்னு கூட தெரியாம போடுறாங்க" என்று கூறியுள்ளார்.