வந்தாச்சு வந்தே பாரத் : சென்னை - மைசூர் இடையே சோதனை ஓட்டம்
By Irumporai
நாட்டிலேயே அதி வேகமாக செல்லும் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.
பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவையினை தொடங்கி வைத்தார். பார்ப்பதற்கு புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் என்பதும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.
ஏற்கனவே இந்தியாவின் நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஐந்தாவது வழித்தடமாக சென்னை மைசூர் இடையே இயக்கப்பட இருக்கிறது.
இன்று சோதனை ஓட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறைவான வேகத்தில் இருந்து அதிவேகம் வரை இந்த சோதனையானது நடைபெறுகிறது.