அடிக்கடி மாடு மோதி விபத்துக்குள்ளாகும் வந்தே பாரத் ரயில் - இது ரயிலா இல்ல அட்டை பெட்டியா?
Mumbai
By Thahir
மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் லேசான சேதம் ஏற்பட்டது.
மாடு மீது மீண்டும் மோதிய வந்தே பாரத் ரயில்
காந்திநகர் - மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிது சேதம் ஏற்பட்டது.
இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயங்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை 6.23 மணியளவில் குஜராத்தின் உத்வாடா மற்றும் வாபி இடையே லெவல் கிராசிங் கேட் எண் 87-க்கு அருகில் கால்நடை மீது ரயில் மோதியது.

இதனால் ரயிலின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்ந்து 4வது முறையாக நடைபெற்றுள்ளது.