இது மூன்றாவது முறை : மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்

By Irumporai Oct 29, 2022 01:28 PM GMT
Report

மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் விபத்திற்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வந்தே பாரத் ரயில் விபத்து 

பாஜக அரசின் சிறப்பான திட்டத்தில் கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் ரயிலானது இன்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதி சேதமானது. இதில் ரயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாக ஏற்படும் விபத்து இதுவாகும்.

இது மூன்றாவது முறை : மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில் | Vande Bharat Train Has Been Damaged

மூன்றாவது முறையாக விபத்து

இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில் கால் நடைகளுடன் ஏற்பட்டுள்ள இந்த விபத்து ரயில்வேதுறையில் தவிர்க்க முடியாது , அதே சமயம் இனி ரயிலை வடிவமைக்கும் போது இந்த விபத்தினை மனைதில் வைத்து ரயில் மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

வந்தே பாரத் ரயிலானது மணிக்கு 160 கி.மீ தூரம் செல்லும் , இது மற்ற ரயில் சேவைகளை விட சிற்ந்தது என்று இந்திய ரயில்வே ஆரம்பத்தில் கூறிய நிலையில் தற்போது ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.