மாடுகள் மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்

Narendra Modi
By Thahir 1 மாதம் முன்

புதிதாக தொடங்கப்பட்ட மும்பை-காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எருமை மாடுகள் மீது மோதி லேசான சேதமடைந்தது.

ரயில் சேதம் 

காந்திநகர் கேப்பிட்டலில் இருந்து மும்பை சென்ட்ரலுக்கு புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பத்வா மற்றும் மணிநகர் நிலையங்களுக்கு இடையில் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த எருமை மாடுகள் மீது மோதியது.

இதனால் ரயிலின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாடுகள் மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம் | Vande Bharat Train Damaged

கடந்த வாரம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்த இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காந்தி நகரிலிருந்து புறப்பட்டு மும்பை சென்ட்ரலுக்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே செல்லும் வகையில் வேகம் கூட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

மாடுகள் மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம் | Vande Bharat Train Damaged

ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அதிகபட்சமாக மணிக்கு 160கிமீ வேகம் வரை செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகத்தரம், பாதுகாப்பு மற்றும் பயணிகளின் சவுகரியம் ஆகியவற்றை மேம்படுத்தும்வகையில் உருவாக்கப்பட்டது இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என மேலும் தெரிவித்தது. 

[

]