வண்டலூர் பூங்காவில் அடுத்தடுத்து கொரோனாவுக்கு இரையாகும் சிங்கங்கள் - மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு!
lion
zoo
died
vandaloor
By Anupriyamkumaresan
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று விலங்குகளை மட்டும் விட்டா வைக்க போகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது. மேலும் 9 சிங்கங்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்தது நீலா என்கிற 9 வயதான பெண் சிங்கமாகும்.
மற்ற விலங்குகளுக்கும் தொற்று இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.