16 வயது வெள்ளை புலி உயிரிழப்பு - வண்டலூரில் சோகம்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலம் பாதித்த 16 வயது பீஷ்மர் என்ற வெள்ளைப்புலி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.
இதில் கடந்த மாதம் ஊழியர்கள் மூலமாக 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் 2 சிங்கங்கள் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில், இங்கு பராமரிக்கப்பட்டு வரும் பிஷ்மீர் என்ற 16 வயது வெள்ளை புலி, கடந்த சில மாதங்களாகவே கிட்னி பாதிப்பு, பக்கவாதம், அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இதில் கடந்த 2 நாட்களாக உடல்நிலை ரொம்ப மோசமடைந்ததால் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளது. இதனை கண்ட மருத்துவ குழுவினர், புலிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.