முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் - எதற்கு தெரியுமா? நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் - எதற்கு தெரியுமா?
Vanathi Srinivasan
Mk stalin
By Petchi Avudaiappan
கோவை மாவட்டத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை ஒதுக்கியதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் எம்.எல். ஏ., நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல். ஏ., டெல்லி செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு வராத நிலையில் மத்திய அரசு தடுப்பூசிகளை கொடுத்துள்ளதாகவும் அதிலும் அதிகமாக தமிழக அரசு கோவைக்கு கொடுத்துள்ளதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? இல்லையா? என்பதை விரைவில் தமிழக அரசு சொல்ல வேண்டும் என்றும் வானதி கேட்டுக் கொண்டார்.