மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்
தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன், தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது உடல்நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உங்களுடைய அன்பினாலும் பிரார்த்தனைகளாலும் விரைவில் உடல்நலம் தேறிவருகிறேன், விரைவில் அனைவரையும் சந்திக்க இருக்கிறேன்.
எனக்காக பிரசாரம் செய்யும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றிகள், தமிழ்நாடு மீது அளப்பரிய அன்பு கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு வெற்றியை பரிசளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
