நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வாங்கி தாரேன் தம்பி! வானதி சீனிவாசன்
நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடாக உள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வானதி சீனிவாசனிடம் ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth#Valimai#ValimaiUpdate https://t.co/eFPMday87G
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 14, 2021
இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.