சாலை விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மகன்
Accident
Son
Vanathi Srinivasan
By Thahir
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார்.இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் சேலம் அருகே விபத்தில் சிக்கியது. சேலம் மாவட்டம் பட்டர்பிளை மேம்பாலத்தில் ஆதர்ஷ் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வானதி சீனிவாசன் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.