திமுகவின் மானத்தைவிட பெண்களின் பாதுகாப்பு எப்போது முக்கியமாகும்? வானதி கேள்வி!

Tamil nadu Sexual harassment Vanathi Srinivasan
By Swetha Dec 27, 2024 02:04 AM GMT
Report

திமுகவின் மானத்தைவிட பெண்களின் பாதுகாப்பு என்று முக்கியத்துவம் பெறும்? என வானதி  சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

வானதி சீனிவாசன் 

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை

திமுகவின் மானத்தைவிட பெண்களின் பாதுகாப்பு எப்போது முக்கியமாகும்? வானதி கேள்வி! | Vanathi Srinivasan Slams Stalin Over Women Safety

செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார் திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு ரா.பாரதிராஜா. 

இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திலும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்து 8 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி

தற்கொலை முயற்சி மேற்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பாதிக்கப்பட்ட செவிலியர். கட்சி பேதத்தைத் தாண்டி ஒரு சக பெண்ணாய் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் சில கேள்விகள். 

திமுகவின் கட்சி பொதுக் கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறி நடந்துக் கொண்டது, தஞ்சாவூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது, அண்ணா பல்கலைக் கழக மாணவியை வன்கொடுமை செய்தது,

பெண்கள் பாதுகாப்பு 

செவிலியரை மிரட்டியது என தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவோர் பலரும் திமுகவினராக இருப்பது ஏன்? தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளிக்கப் பல அபலைப் பெண்கள் தயங்கும்

திமுகவின் மானத்தைவிட பெண்களின் பாதுகாப்பு எப்போது முக்கியமாகும்? வானதி கேள்வி! | Vanathi Srinivasan Slams Stalin Over Women Safety

நிலையில் புகார் அளித்த பெண்ணின் விபரங்களை பொதுவெளியில் விடுவது, புகார் அளித்து பல நாட்களாக நடவடிக்கை எடுக்காதது என பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் வதைப்பது ஏன்? 

குற்றச் செயல்களில் ஈடுபடும் திமுகவினரை காப்பாற்றுவதில் இருக்கும் தங்கள் அரசின் கவனம் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கி காட்டப்படாதது ஏன்? தங்களது ஆட்சியில் திமுகவின் மானத்தைவிட

பெண்களின் பாதுகாப்பு என்று முக்கியத்துவம் பெறும்? தங்களது அரசின் நடவடிக்கையின்மையாலும் தங்கள் கட்சியினரின் குற்ற நடவடிக்கைகளாலும் பாதிக்கப்படும் பெண்களை கண்டு தங்கள் பொறுப்பை உணருங்கள்!

இனியாவது தங்கள் கட்சியினரின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளை தடுத்து பெண்களுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.