என்ன நிகழ்ச்சிக்கு என்ன கேப்ஷன்டா - முடியலப்பா! வானதியின் அட்டூழியம்

Bharatiya Janata Party Vanathi Srinivasan Isha Foundation
By Anupriyamkumaresan Oct 24, 2021 02:20 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

கோவை ஈஷா கோவிலில் நின்ற புகைப்படத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற கேப்ஷனை பதிவு செய்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்தியா 100 கோடி தடுப்பூசி சாதனை படைத்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வானதி சீனிவாசன், கோவை செம்மேடு பகுதி முன்னாள் பாஜக ஊராட்சி கவுன்சிலர் திரு.நிலகண்ட ஜயர் அவர்களின் மறைவையோட்டி அவர்கள் இல்லத்திற்க்கு சென்று மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுடன் ஆறுதல் தெரிவித்தோம் என்று பதிவு செய்திருந்தார்.

என்ன நிகழ்ச்சிக்கு என்ன கேப்ஷன்டா - முடியலப்பா! வானதியின் அட்டூழியம் | Vanathi Srinivasan Share Photo And Putwrongcaption

இதனை கண்ட பொதுமக்கள் பலரும் கேப்ஷன் மாறிவிட்டது, என்ன இது கொண்டாட்டத்திற்கு துக்க கேப்ஷன் என கமெண்டுகளை அள்ளி தட்டினர். இதனை கண்ட வானதி சீனிவாசன், உடனே அந்த கேப்ஷனை எடுத்துவிட்டு 100 கோடி தடுப்பூசி சாதனை படைத்ததற்கு பிரதமருக்கு நன்றி என்ற கேப்ஷனை மாற்றினார்.