பேஷன் வாக்கில்..வெட்கப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன்..மாஸ் காட்டிய குஷ்பு - வைரல் வீடியோ
தனியார் கல்லுரியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனும், குஷ்புவும் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேஷன் ஷோ
கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்று, கோவை மாவட்டம் பீளமேட்டிலுள்ள ஒரு தனியார் கல்லூரி அரங்கில் மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பேஷன் ஷோவில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். அவருடன் பாஜகவின் மகளிர் தேசிய ஆணைய உறுப்பினர் குஷ்புவும் பங்கேற்றார்.
வெட்கப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன்
இந்த நிகழ்ச்சியில், ராம்ப் வாக்(Ramp Walk) செய்ய குஷ்புவும், வானதி ஸ்ரீனிவாசனும் அழைக்கப்பட்டனர். திரைத்துறை சேர்ந்தவர் என்பதால் குஷ்பு சாதரணமாக நடந்து வர, வானதி ஸ்ரீனிவாசன் சற்று சிறிது கொண்டு தயங்கி தயங்கி நடந்து வந்தார்.
வானதி ஸ்ரீனிவாசனுக்கு அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.