எங்க Office-ல மது பாட்டிலா? ஷாக் ஆன வானதி சீனிவாசன்!!
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பேசியது வருமாறு,
வானதி செய்தியாளர் சந்திப்பு
இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் வெயில் பதிவாகும் இடங்களாக தமிழகம் இருக்கிறது. இது அபாயகரமானது. தமிழகம் வெகு வேகமாக நகர் புறம் ஆகுவதிலும், தொழிற்சாலைகளை அதிகரிப்பது காலத்தினுடைய தேவை என்றாலும், அது சுற்றுசூழலோடு ஒத்து நடந்தால் தான் மக்கள் வாழக்கூடிய இடங்களாக அவை இருக்கும்.
பல அமைப்புகள் மரங்களை நடுவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை சரியான விதத்திலேயே அரசு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.அதற்கு ஒரு செயல்திட்டம் கொண்டுவர வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடிற்கு நிதி நடத்தினால் மட்டும் போதாது, அதில் சரியான முறையை பின்பற்ற வேண்டும். இது எங்கள் கோரிக்கையாக வைக்கிறோம். தேர்தல் முடிந்தும் இன்னும் எம்.எல்.ஏ'க்கள் அலுவலகம் திறக்கப்படாமல் இருக்கிறது. இதனை நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் உடனடியாக தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் பேசவேண்டும்.
கேவலமானது
குடிநீர், வறட்சி போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் மாநில அரசுக்கு எதிராக ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிடுபவர்களை சிறையில் போடுகிறார்கள். இது முதல் முறையல்ல. பாஜகவின் நிர்வாகி 1 1/2 மாதம் சிறையில் இருந்தார். இதனை தொடர்ச்சியாக அவர்கள் செய்கிறார்கள்.
தங்களின் அதிகாரத்தை எந்தளவிற்கு துஸ்பிரயோகம் செய்கிறார்கள். ஒருத்தர் மீது கேஸ் போடுவது என்றால் கஞ்சா கேஸ் தான். இது பழைய நடைமுறை. அதனை திமுக அரசு நம்புவது கேவலமானது. ஒருபோதும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பாஜக தடையாக இருக்காது.
எங்க Office-ல மது பாட்டிலா?
3 ஆண்டுகள் ஆட்சியில் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியுள்ளார். முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை. முதல் குடும்பத்திற்கு பணம் சேர்ப்பதை பற்றி தான் அமைச்சர்கள் கூட பேசுகிறார்கள். அரசாங்கம் விலை உயர்த்தாத இடமேயில்லை. டாஸ்மார்க்கில் கூட விலைஉயர்த்தி விட்டார்கள் என கூறுகிறார்கள்.
அப்போது செய்தியாளர்கள் உங்க அலுவலகத்திலேயே பாட்டில் இருப்பதாக கேள்வி கேட்க, அதிர்ச்சியடைந்த வானதி எங்க ஆப்ஸ்'குள்ளயாவா...என கூறி,
உடனே வானதி "என்ன தம்பி இது" என அருகில் இருந்து மாவட்ட தலைவரிடம் கேட்க அவர் அரசே செய்வதாக கூறினார்.
எம்.எல்.ஏ ஆபீஸ் திறக்கவில்லை என்றால் எப்படி எல்லாம் நடக்கிறது என வேதனை தெரிவித்தார்.