தமிழக முதல்வரின் உடனடி கவனத்திற்கு- வானதி சீனிவாசன் கடிதம்..!

tamilnadu vanathisrinivasan chiefminister
By Irumporai May 10, 2021 11:14 AM GMT
Report

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியினை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் :

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி ஸ்டெர்லைட் மூலமாக கிடைப்பதற்கு காலதாமதம் ஆவதாக அறிந்தேன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு என்ன உதவிகள் வேண்டுமோ அதை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்ய வேண்டும்.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் அளவை இன்னும் பத்து நாட்களுக்கு தொடர வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு தாங்கள் உடனடியாக தமிழக அரசின் சார்பில் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டு்ள்ளார்.

அதே சமயம், கோவை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படுவதால் தமிழக அரசு கோவை மாவட்டத்திற்கு விரைவில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.