மே 2-க்கு பிறகு கமல் நடிக்க சென்று விடுவார்: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்
மே 2-ம் தேதிக்குப் பின்னர் கமல்ஹாசன் நடிக்கச் வென்று விடுவார் என வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
கோவை ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். மனுதாக்கல் செய்த பின்னர் வேட்பாளர் வானதி சீனிவாசன்இந்த தொகுதியில் அதிமுக முன்னரே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன்.
கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பாஜக வெற்றி பெறும் என கூறினார். மேலும் சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
தொலைக்காட்சியில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2-ம் தேதிக்குப் பின்னர் 'பிக் பாஸ்' அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகப் போகிறார் என கூறிய வானதிசீனிவாசன்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாகப் பேசுவோம் என கூறினார்.