ஆளும் கட்சிக்கு புகழ்பாடுகின்ற ஒருவராக ஆளுநரை மாற்ற முடியாது - வானதி சீனிவாசன்
ஆளும் கட்சிக்கு புகழ்பாடுகின்ற ஒருவராக ஆளுநரை மாற்ற முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
புறக்கணித்த ஆளுநர்
தமிழக சட்டமன்ற கூட்டதொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நாள் முதலே திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு வாழ்க என்ற கோஷங்களைகளையும் எழுப்பியும் வந்தனர்.
இதனையடுத்து ஆளுநர் தமிழ்நாடு, திராவிட மாடல் மற்றும் அண்ணா, அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் பெயர்களையும் தனது உரையில் இருந்து ஆளுநர் புறக்கணித்து பேசினார்.
இதன் பின்னர் ஆளுநர் தனது உரையை முடிக்க சபாநாயகர் அப்பாவு தனது உரையை தொடர்ந்தார். பின்னர் ஆளுநர் உரை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றிருந்த வார்த்தைகளை தவிர்த்துள்ளார். இது வருந்ததக்க ஒன்று என்றார்.

அப்போது பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வானதி சீனிவாசன் கண்டனம்
இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஆளுநர் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திமுக அரசுக்கு எதிராக தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஆளுநர் உடனான சுமுக உறவை மேம்படுத்துவதில் ஆளும் அரசு தவறவிட்டுவிட்டது. தங்களுடைய சித்தாந்தத்திற்கு எதிராக வெளியிடங்களில் ஆளுநர் பேசுகிறார் என்பதற்காக ஆளுநரை சட்டசபைக்கு வரவழைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டை அவர் தெரிவித்தார் .
மேலும் பேசிய அவர், திமுகவின் சித்தாந்தத்தை பாடும் ஒருவராக ஆளுநரை மாற்ற நினைக்கிறது இந்த அரசு .இதுதான் தமிழக அரசாங்கத்தின் ஜனநாய போக்காக உள்ளது இது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகும் இதனை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.