நிலைப்பாட்டில் மாற்றமில்லை அதிமுக குறித்து முதல் முறை பேசிய வானதி ஸ்ரீனிவாசன்

Tamil nadu BJP Vanathi Srinivasan
By Karthick Sep 27, 2023 07:13 AM GMT
Report

ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடும், தனி சித்தாந்தமும் இருக்கின்றது என பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

வெளியேறிய அதிமுக 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது மட்டுமின்றி இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் ஒட்டுமில்லை உறவும் இல்லை என அதிரடியாக அறிவித்த நிலையில், பாஜக நிலை தமிழகத்தில் பெரும் சிக்கலாகி இருக்கின்றது.

vanathi-srinivasan-comments-about-admk-alliance

திமுக, அதிமுக தவிர்த்து வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையை பாஜக எட்டியிருக்கும் நிலையில், பாஜகவிற்கு வரும் தேர்தல் சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

கூட்டணியில் அதிமுக வெளியேறியதை அடுத்து அது குறித்து தமிழக பாஜக தலைவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அதற்கு தேசிய தலைவர்களே பதிலளிப்பார்கள் என்றும் அதற்கு பிறகே தாங்கள் அது குறித்துபேசுவோம் என கருத்து தெரிவித்தனர். 

வானதி ஸ்ரீனிவாசன் கருத்து

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் தெரிவிக்கும் வரும் தாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை என அழுத்தமாக தெரிவித்த அவர், ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்படும், தனி சித்தாந்தங்களும் உள்ளன என்றார்.

vanathi-srinivasan-comments-about-admk-alliance

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பாஜக தேசிய தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட வானதி ஸ்ரீனிவாசன், அக்காட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.