“எதை கேட்டால் எதை கொடுக்கிறீர்கள்” - பி.டி.ஆருக்கு வானதி சரமாரி கேள்வி

வெள்ளைஅறிக்கை TNGovtWhitePaper PTRPalanivelThiyagarajan
By Petchi Avudaiappan Aug 09, 2021 11:59 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விமர்சித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

இதில் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையாக ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை என பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி சீனிவாசன் வெள்ளை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே வானதிக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால், வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது” என வானதி கூறியுள்ளார்.