மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வானதி சீனிவாசன்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, இதில் கோடை வடக்கு தொகுதியும் ஒன்று.

2021ம் ஆண்டு தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
தொகுதி மக்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார், இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காலில் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, வானதியின் திடீர் சுகவீனத்தால் கோவை பகுதி பாஜக வினர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
