பாஜக - திமுக கூட்டணியா? வானதி சீனிவாசன் சொன்ன பதில்
DMK - BJP Alliance: பாஜக - திமுக நெருங்கிறதா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.
பாஜக - திமுக கூட்டணி
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், திமுக மற்றும் அதிமுக அதனை மறுத்தது.

இதே போல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாஜக திமுக கூட்டணி அமைக்கும் என தவெகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவியாக உள்ள வானதி சீனிவாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
திமுக - பாஜக நெருங்கிறதா என்ற கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி சோமு, அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என பதிலளித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என கூறினார்.

மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்று கூறினார்.