360யில் சுழலும் இருக்கை - ரயிலில் சுற்றி சுற்றி விளையாடி Vibe செய்த வானதி சீனிவாசன்

Chennai Viral Video Vanathi Srinivasan
By Sumathi Apr 09, 2023 11:03 AM GMT
Report

வானதி சீனிவாசன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

வந்தே பாரத் 

சென்னை முதல் கோவை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது.

360யில் சுழலும் இருக்கை - ரயிலில் சுற்றி சுற்றி விளையாடி Vibe செய்த வானதி சீனிவாசன் | Vanathi Sreenivasan Vibe On Vande Bharat Train

சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

வானதி சீனிவாசன்

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார். மேலும், தான் பயணித்த காட்சிகள், பைலட்டுகளுடன் எடுத்த புகைப்படங்கள் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், Rotating Chair வசதியை பயன்படுத்தி சுற்றி சுற்றி விளையாடியுள்ளார். மேலும், முகம் முழுக்க சிரிப்போடு, சிறியப் குழந்தைகள் போல நடந்துக் கொண்ட காட்சிகள் கவனம் பெற்றுள்ளது.