சனாதன குறித்து மாணவர்களிடையே நஞ்சை விதைக்கும் திமுக...வானதி கண்டனம்..!!

Udhayanidhi Stalin Tamil nadu DMK BJP Vanathi Srinivasan
By Karthick Sep 13, 2023 12:02 PM GMT
Report

சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துக்களை செப்டம்பர் 15-ஆம் தேதி மாணவிகள் தெரிவிக்கலாம் என திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு வானதி ஸ்ரீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சனாதன விவாதம்

செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் அதிரடியாக கூறிய கருத்துக்கள் கடும் சலசலப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.

vanathi-slams-tvk-college-notice-about-sanathanam

மத்திய அமைச்சர்கள், இந்துத்துவ கொள்கைகள் கொண்டவர்கள், தமிழக பாஜகவினர் என பலரும் எதிர்த்து வரும் நிலையில், பெரியாரிய, முற்போக்கு வாதிகள் பலரும் அவரது கருத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்

இந்நிலையில், தான் மத்திய அமைச்சர் அமித் ஷா, கஜேந்திர சிங் ஷெகாவத் போன்றோர் உதயநிதியை பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.10 நாட்கள் கடந்த பிறகும் இன்றும் இது குறித்தான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.

vanathi-slams-tvk-college-notice-about-sanathanam

இந்நிலையில், திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துக்களை கூறலாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

vanathi-slams-tvk-college-notice-about-sanathanam

இது சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், இதற்கு பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.அவர் இது குறித்து பேசும் போது, அரசு கல்லூரி மாணவர்களிடையே திமுக நஞ்சை விதைக்கிறது என சாடி, கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்பிற்கு எதிராக இல்லையா என்றும் அவர் வினவியுள்ளார்.