கொங்குநாடு பரிசீலனை குறித்து வானதி சீனிவாசன் புதிய தகவல்
தமிழக அரசின் செயல்பாட்டை பொறுத்து கொங்குநாடு பரிசீலனை இருக்கும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற தடுப்பூசிகளை ஒரு சிலர் எடுத்து கொண்டு போய் தனியார் மருத்துவமனைக்கு கொடுப்பதாக தகவல் வருகிறது.
அதற்கான ஆதாரத்தைக் திரட்டி வருகிறோம். இந்த விஷயத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டைக் தனியாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வரும் நாட்களின் மாநில அரசாங்கம் எப்படி கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறதோ அதன் அடிப்படையில் கொங்குநாடு பரீசிலைனை வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.