கோவை மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை
Mk Stalin
Vanathi srinivasan
Covai
By Petchi Avudaiappan
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை மாவட்டம் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வு களுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த 11 மாவட்டங்களில் கோவை மாவட்டமும் ஒன்று. நாள்தோறும் பாதிப்பு அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் அந்த மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.