அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி டீசர் வெளியீடு !

Official Teaser Vanangamudi Arvind Swami D. Imman
By Thahir Aug 03, 2021 01:09 PM GMT
Report

நடிகர் அரவிந்தசாமி போலீசாக நடிக்கும் ‘வணங்காமுடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

[P8MF ]

தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் ஹீரோ போன்று இளமை துள்ளலுடன் இருப்பவர் அரவிந்தசாமி. மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், பம்பாய், மின்சார கனவு போன்ற மாபெரும் வெற்றிப்படங்களில் நடித்த பிரபலமானார். நீண்ட காலம் சினிமா படங்களில் நடிக்காமல் இருந்த அவர், மணிரத்தினத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பின்னர் ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்தது சூப்பர் ஹிட்டடித்தது.

இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் தற்போது உள்ள ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, கள்ளபார்ட் ஆகிய படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடித்துள்ளார். தொடர்ந்து மணிரத்னத்தின் நவரசாவில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார்.

அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி டீசர் வெளியீடு ! | Vanangamudi Official Teaser Arvind Swami D Imman

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அரவிந்தசாமி நடிப்பில் உருவான படம் ‘வணங்காமுடி’. செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அரவிந்தசாமி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் மற்றும் நந்திதா ஸ்வேதா இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் குறித்து எந்த வித அப்டேட் வராமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. போலீசாக அரவிந்தசாமி மாஸ் காட்டியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.