இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
கடந்த சில நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1048 புள்ளிகள் சரிந்து 57,050 புள்ளியில் வர்த்தகம் நடைபெறுகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 345 புள்ளிகள் குறைந்து 16,982 புள்ளிகளில் வர்த்தகமானது நடைபெறுகிறது.
டாலாருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து ஒரு டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.81.54 ஆக உள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாடடு மத்திய வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.