சர்தார் வல்லபாய் பட்டேலின் 147வது பிறந்தநாள் - உலகின் உயரமான அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை..!
இந்தியாவின் இரும்பு மனிதன் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
சர்தார் வல்லபாய் பட்டேல்
விடுதலை போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் சர்தார் வல்லப்பாய் படேல். இவர் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
பிரதமர் மோடி மரியாதை
இந்நிலையில், இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில், நர்மதை நதிக்கரையோரம் அவரது 597 அடி சிலை உள்ளது. இந்த சிலைக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
