முட்டாள்தனமா செய்யாதிங்க அஜித் , நீங்க ரியல் ஹீரோ இல்லை : அஜித்தை சாடிய ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர்

valimaimakingvideo antiindianproducer adhambava
By Irumporai Dec 16, 2021 05:57 AM GMT
Report

வலிமை மேக்கிங் வீடியோ(Valimai Making Video) வந்து, பலரின் பாராட்டைப் பெற்றிருக்கும் நிலையில், நடிகர் அஜித்தின் முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஆனால்  புளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா மட்டும் அஜித்தின் செய்த ஸ்டண்ட் காட்சியை கண்டித்துள்ளார்.

இது பற்றி ஆதம் பாவா தனது ட்விட்டர் பக்கத்தில் ;

இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவரகள் மட்டுமல்லாமல் எதிரேவருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது .

இது போன்ற முட்டாள்தனமான வேலைகள் உங்கள் ரசிகர்களையும் செய்யத் தூண்டும், அஜித் அவர்களே இது தவறான செயல். நீங்கள் சினிமாவில் ஹீரோ ரியல் ஹீரோ அல்ல திருந்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.