’வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல்: அப்டேட் கொடுத்த யுவன்

Valimai Valimai Update Yuvan Shankar Raja
By Thahir Jun 22, 2021 08:36 AM GMT
Report

‘வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல் இருக்கிறது என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

’வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல்: அப்டேட் கொடுத்த யுவன் | Valimai Valimaiupdate Yuvanshankarraja

சிம்பு நடிப்பில் ’மாநாடு’ படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானதையொட்டி வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி, கல்யாணி பிர்யதர்ஷன் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை உற்சாகப்படுத்த நேற்றிரவு க்ளப்ஹவுஸில் கூட்டாக பேசினார்கள். அப்போது, பேசிய யுவன் ஷங்கர் ராஜா “ ‘வலிமை’ படத்தில் அம்மா பாசத்தை போற்றும் சென்டிமெண்ட் பாடல் ஒன்று உள்ளது. அப்பாடலை வித்தியாசமக அமைத்துள்ளேன்” என்று அப்டேட் கொடுத்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து பேசிய, இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ‘மங்காத்தா 2 வருமா?’ என்று கேட்டதற்கு ” முதலில் ’வலிமை அப்டேட் வரட்டும். பின்பு மங்காத்தா 2 பற்றிச் சொல்கிறேன்” என்று கூறினார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’வரலாறு’ அஜித் படங்களின் வரலாற்றில் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்தப்படம். அஜித் மூன்று கேரக்டர்களில் நடித்த, இப்படம் பெரிய வெற்றி பெற்றதோடு வசூலையும் குவித்தது. அஜித்துக்கு அம்மாவாக சுஜாதா, கனிகா நடித்து உருக வைத்தார்கள். அம்மா காட்சிகள் அழுத்தமாகவும் வலிமையாகவும் காட்சிப்படுத்தப்பட்டதோடு தனியாக பாடலும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு ’வலிமை’ படத்தில் அம்மா சென்டிமெண்ட் பாடல் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள்.