''நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” - வெளியானது வலிமை Glimpse
Thala
Valimai
ValimaiGlimpse
ValimaiGlimpseDay
By Irumporai
நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், முதல் பாடல் ‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட வீடியோ) இன்று மாலை 6 மணிக்கு வெளியானது இந்த வீடியோவில் ‘’ நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி’’ என்ற வசந்த்துடன் அஜித்தின் சண்டைக்காட்சிகள் மட்டுமே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளது.