யுவன் இசையில் `நாங்க வேற மாதிரி ’ - வலிமைப்பட முதல் பாடல் இன்று வெளியீடு - ரசிகர்கள் ஆர்வம்!

release valimai update first song fans enjoy
By Anupriyamkumaresan Aug 02, 2021 09:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

'வலிமை' படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகவுள்ளது.

'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, வினோத், அஜித் மற்றும் போனிகபூர் ஆகிய மூவர் கூட்டணியும் மீண்டும் வலிமைபடத்தில் இணைந்துள்ளனர். பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

யுவன் இசையில் `நாங்க வேற மாதிரி ’ - வலிமைப்பட முதல் பாடல் இன்று வெளியீடு - ரசிகர்கள் ஆர்வம்! | Valimai Update First Song Release Today

சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் மற்றும் மேலும் சில போஸ்டர்கள் என அப்டேட்கள் குவிந்தன. இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என அப்டேட்களை மழை போல் பொழிய வைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தினர் படக்குழுவினர்.

அதையடுத்து வலிமை படத்தின் முதல் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே யுவன் வலிமை படத்தின் இன்ட்ரோ பாடலுக்கு இசையமைத்து முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் முதல் பாடல் மதுரை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடலாக அமைந்துள்ளதாகவும், அந்தப் பாடல் தான் அஜித்தின் இன்ட்ரோ பாடலாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுவன் இசையில் `நாங்க வேற மாதிரி ’ - வலிமைப்பட முதல் பாடல் இன்று வெளியீடு - ரசிகர்கள் ஆர்வம்! | Valimai Update First Song Release Today

இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் முதல் வரி நாங்க வேற மாதிரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தொடர்ந்து காலை முதலே ரசிகர்கள் அவர்களது கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.