வலிமை அப்டேட் கொடுத்த தேர்தல் ஆணையம்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வலிமை அப்ட்டேட் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம் . தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம். அதன்படி, அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்லக் கூடாது.
ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது , வாக்களிக்கும் போது சமூக இடைவெளி வேண்டும் இது போன்ற விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளியிட்ட "வலிமை" அப்டேட் என்ற தலைப்பில் தேர்தல் ஆணைய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தில், ஜனநாயகத்தின் வலிமை ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது, 100% ஒட்டு இந்தியர்களின் பெருமை’ என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவை தற்போது அஜித் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.