“கேம் இன்னும் முடியல..” - வெளியானது வலிமை பட ட்ரெய்லர்!

valimai trending trailer released
By Swetha Subash Dec 30, 2021 01:21 PM GMT
Report

அஜித் குமார் நடிப்பில் , எச்.வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை.

யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி, நடிகர் கார்த்திகேயன், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது.

இந்த சூழலில் படத்தின் டிரெய்லரை எப்போதாம்பா வெளியிடுவீங்க என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சோனி மியூஸிக் சவுத்,

“உங்களது ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்க்ரீனுடன் தயாராக இ்ருங்கள் ..பெருங்கோபம் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது “ என வலிமை படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 

இந்நிலையில் வலிமை படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் கட்சிகளுடன் அம்மா சென்டிமெண்டில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.