வலிமை படத்தின் டிரைலரை மாற்ற சொன்ன தல அஜித்

change ajith thala trailer order
By Praveen Apr 28, 2021 11:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித், தனது நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் டிரைலரை மாற்ற சொல்லி இருக்கிறார்.

அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் வலிமை படத்தின் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் 4 மெலோடி பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தில் அஜித் கம்பீரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இருந்தாலும் இதில் அண்ணன், தங்கை, அம்மா, மகன் என பல சென்டிமெண்ட் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரானா பரவல் அதிகரித்து வருவதால் திட்டமிட்டப்படி வலிமை போஸ்டர் வெளியாகாது என அறிவித்தனர். இந்த படத்தில் மிளர வைக்கும் சேசிங் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதை டிரைலரில் படக்குழுவினர் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த காட்சிகள்தான் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. அதனால் சஸ்பென்சை உடைக்கவேண்டாம் என கூறி டிரைலரிலிருந்து அந்த காட்சிகளை மாற்ற சொல்லிட்டாராம் அஜித். இதனால் வேறொரு டிரைலரை படக்குழு தயார் செய்து வருகிறார்களாம்.