Friday, Jul 25, 2025

‘Beast’க்கு போட்டியாக Valimai படக்குழு வெளியிட்ட அஜீத்தின் மாஸ் வீடியோ - ரசிகர்கள் கொண்டாட்டம்

Valimai actor ajith song-video mass-dance
By Nandhini 3 years ago
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் ‘தல’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

வலிமை படத்தை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், வரும் 24-ம் தேதி இவர் நடித்த வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில், அஜீத்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது, வேறமாறி பாடலுக்கு அஜித்தின் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அஜீத்தின் டான்ஸ் பார்த்து அவரது ரசிகர்கள் வீடியோ வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், காதலர் தினத்தன்று விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டது. இதற்கு போட்டியாகத் தான் அஜித்தின் அல்டிமேட் குத்து டான்ஸுடன் கூடிய புரோமோ வீடியோவை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.